ஃபிபா ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 06:11 pm
journalist-who-uncovered-fifa-corruption-shot-dead

சர்ச்சைக்குரிய சர்வதேச கால்பந்து கழகம் ஃபிபாவில் நடந்து வந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவிய கானா நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஹுசேன் சுவாலே. இவர் பிரபல பத்திரிகையாளர் அனஸ் அரேமியா அனஸுடன் சேர்ந்து பணியாற்றி வந்தவராவார். கானா நாட்டில் நடைபெற்ற பல்வேறு கால்பந்து ஊழல் பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை அனஸை சேரும். சர்வதேச கால்பந்து கழகமான ஃபிபாவின் முக்கிய உறுப்பினரான கானா நாட்டை சேர்ந்த க்வேசி நியான்டகி செய்த ஊழலை ஆதாரத்துடன் நிரூபித்த அனஸ் மற்றும் அவரது உதவியாளர்கள், சர்வதேச அளவில் பாராட்டப்பட்டனர். இவர்களது செயல்களால், ஊழல் நிறைந்த கானா கால்பந்து கழகத்தை, அந்நாட்டின் அரசு கலைக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில், பணிமுடிந்து தனியே வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹுசேனை மர்ம நபர்கள் நேற்று சுட்டுக் கொன்றனர். அவர் பணியாற்றி வந்த டைகர் ஐ பிஐ என்ற நிறுவனம், அவர் கொல்லப்பட்ட செய்தியை உறுதி செய்தது. இந்த சம்பவம் தன்னை சோகத்தில் ஆழ்த்தியதாக அனஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட கொலை என உறுதி செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close