மொபைல் பாஸ்வேர்டை தர மறுத்த கணவரை எரித்துக்கொன்ற கொடூர மனைவி!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 12:44 pm
wife-burned-husband-alive-when-he-refused-to-give-her-his-phone-s-pin-code

இந்தோனேசியாவில்,மொபைல் போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவரை, மனைவி எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் பந்தன்வாங்கி(Pandanwangi) என்ற கிராமத்தில் இல்ஹாம் சயானி (25) என்ற பெண், அவரது கணவர் டெடி புர்னாமா(26) வசித்து வருகின்றனர். 

சில தினங்களுக்கு முன்பு டெடி, வீட்டு மேற்கூரையில் உடைந்த ஓடுகளை சரிசெய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த அவரது மனைவி சயானி, மொபைல் போனில் பாஸ்வேர்டு போட்டு தர சொல்லியிருக்கிறார். அவரோ வேலையாக இருக்கிறேன், பாஸ்வேர்டு தர முடியாது என கூறியுள்ளார். தொடர்ந்து மனைவி கேட்கவே, டெடி கோபத்தில் இறங்கி வந்து அவரை தாக்கியுளளார்.

பதிலுக்கு சயானியும் கணவரை அடித்துள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இறுதியில், ஆத்திரத்தில் சயானி அருகில் இருந்த பெட்ரோலை எடுத்து டெடி மீது ஊற்றி தீ வைத்தார். இதனை தெருவில் சென்ற ஒருவர் பார்த்து வந்து டெடியை  காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இரு தினங்களாக தீவிர சிகிச்சை பெற்ற டெடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சயானியை போலீசார் கைது செய்துள்ளனர். 

மக்களுடன் மிகவும் ஐக்கியமாகியுள்ள மொபைல் போன் மூலமாக தொடர்ந்து இதுபோன்ற ஏராளமான உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. இருந்தாலும் இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close