மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீவிபத்து- 20 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Jan, 2019 02:08 pm
mexico-pipeline-explosion-kills-at-least-20

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெக்சிகோவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், டீசலுக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க நேரிடுகிறது.

இதனால் அங்கு பெட்ரோல் திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. இதில் சம்பவ இடத்திலே‌யே உடல் கருகி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் தீக்காயமடைந்த 54 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close