ஆப்கானிஸ்தானில் ஆளுநர் சென்ற வழியில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதில் ஆளுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது காவலர்கள் 9 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் லோஹர் மாகாண ஆளுநர் தனது பாதுகாவலர்களுடன் தலைநகர் காபூலில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் உள்ள அகா மாவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆளுநர் வாகனத்துடன் சில பாதுகாப்பு வாகனங்களும் சென்றன.
அந்த சமயத்தில், பாதுகாப்பு வாகனத்திற்கு அருகில் சென்ற ஒரு கார் வெடித்தது. இதில், அருகில் இருந்த வாகனங்கள் வெடித்து சிதறின. இதில் ஆளுநரின் பாதுகாப்பு காவலர்கள் 9 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஆளுநர் அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பினார்.
மேலும், 15 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
newstm.in