மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் !

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jan, 2019 12:01 pm
thaipoosam-festival-in-malaysia

மலேசியாவில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.  தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் இன்று தைப்பூசத் திருவிழா களை கட்டியது. கோலாலம்பூரின் புறப்பகுதியில் உள்ள பத்துகுகை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடம்பில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல் ஆண்கள், பெண்கள் என பலரும் பால்குடம் ஏந்தி, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்தும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிப்பட்டனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close