ஆப்கானில் பாதுகாப்புப்படை அலுவலகம் மீது தீவிரவாத தாக்குதல்: 12 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 05:43 pm
12-security-officers-dead-after-taliban-attacks-afghan-military-base

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படை முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்டாக் மாகாணத்தில் அந்நாட்டு பாதுகாப்புப்படை முகாம் இயங்கி வருகிறது. இன்று அப்பகுதிக்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படை முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். 

உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை அப்பகுதியில் வெடிக்கச் செய்தனர். பின்னர் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படை அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். 

இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஆப்கான் பாதுகாப்புப்படை அதிகாரிகள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close