நேபாளத்தில் நேற்று இரவு  நில நடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Jan, 2019 04:03 pm
earthquake-of-4-5-magnitude-strikes-eastern-nepal

நேபாளத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள போஜ்பூர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள கோடாங் மாவட்டத்தில்  நில நடுக்கம் உணரப்பட்டது. 

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் 12 மணி நேரத்தில் ஏற்படும் 2-வது நில நடுக்கம் இதுவாகும்.

முன்னதாக, தலைநகர் காத்மாண்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு  நில நடுக்கம் உணரப்பட்டது.  கடந்த 2015- ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் இவை என நேபாள புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடன‌டியாக தகவல் வெளியாகவில்லை.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close