பிலிப்பைன்சில் குண்டுவெடிப்பு- 19 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Jan, 2019 12:14 pm
bomb-attacks-at-church-kill-many-in-southern-philippines

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தேவாலய வளாகத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்ததில் 19 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சோலோ மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று பிரார்த்தனை செய்வதற்காக மக்கள் கூடியிருந்தனர். அப்போது தேவாலயம் அருகே முதலில் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த சில நொடிகளில் வாகன நிறுத்துமிடம் அருகே மற்றொரு குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ‌குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அபு சயாப் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close