பாகிஸ்தான் நவாஸ் ஷெரிப்பின் தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 01:00 pm
nawaz-sharif-s-lawyer-seeks-suspension-of-his-sentence-on-medical-grounds

உடல்நிலை பாதிப்பு காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தண்டனையை ரத்து செய்யக்கோரி அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபணமானதால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் லாகூரில்  உள்ள கோட் லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம், அவென்பீல்டு வழக்கில், ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், 69 வயதாகும் நவாஸ் ஷெரிப்புக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

நவாஸ் ஷெரிப் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். அவர் தவறாமல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தண்டனையை ரத்து செய்யுமாறு அவரது தரப்பில் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close