பிரேசில் சுரங்க கழிவு அணை விபத்து; பலி எண்ணிக்கை 110 ஆக உயர்வு

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 02:01 pm
brazil-mining-dam-disaster-death-toll-rises-to-110

கடந்த வாரம் பிரேசிலின் மினாஸ் ஜெராய்ஸ் பகுதியில், சுரங்க கழிவு அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில், பலியானோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராய்ஸ் பகுதியில், இரும்பு சுரங்கங்களின் கழிவுகளை தடுத்து வைத்திருந்த அணைக்கட்டு உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கழிவு வெள்ளம் ஏற்பட்டு, பென்டோ ராட்ரிகஸ் என்ற கிராமம் முழுதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கழிவுகளில் பல வீடுகள் கட்டிடங்கள் மூடப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிகை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தியாளரான 'வேல்' நிறுவனத்துக்கு சொந்தமான இந்த அணை ஏற்கனவே மோசமான நிலையில் இருந்ததாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விபத்தில் பலியானோர் பலர், 'வேல்' நிறுவனத்தின் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close