ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்! 15 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 09:37 am
afghanistan-terror-attack-15-dead

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள், போலீசார் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பயங்கரவாதிகளை  ஒழிக்க அந்நாடு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சாரிபுல் என்ற வடக்கு மாகாணத்தின் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனைச் சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

பின்னர் பாதுகாப்புப்படை வீரர்களும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், ராணுவ வீரர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தலிபான் பயங்கரவாதிகள் 9 பேரும் பலியாகினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close