சவுதி இளவரசர் இந்தியா வருகை

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 04:59 pm
saudi-prince-to-arrive-in-india-on-february-19

சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 19-ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபின் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமாக ரியாத் சென்றார்.  இந்த பயணத்துக்குப் பின் 2017-18-இல் இந்தியா-சவூதி நாடுகளிடையேயான இருதரப்பு வர்த்தகம் சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. 

இந்நிலையில் சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 19-ஆம் தேதி இந்தியா வர உள்ளார். டெல்லியில், சவுதி அரேபிய தேசத்தின் புதிய தூதரகத்தைத் திறந்து வைக்கும் அவர், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close