நியூசிலாந்தில் பயங்கர காட்டுத் தீ- வெளியேறும் மக்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 05:51 pm
nelson-forest-fires-in-new-zealand-3000-peoples-evacuvated

நியூசிலாந்து நெல்சன் நகரில் 6-வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால் 3 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த 23 ஹெலிகாப்டர்கள் மூலம் நீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காற்றின் வேகம் அதிகமிருந்து வருவதால் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் 6 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. சுமார் மூன்றாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயின் வீரியம் அதிகமிருப்பதால் மேலும் 75 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறத் தயாராகுமாறு நெல்சன் நகர நிர்வாகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close