ஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 05:23 pm
zimbabwe-main-flood-over-60-feared-to-be-dead

ஜிம்பாப்வேயின் மஷோனலாந்து பகுதியில், அணைக்கட்டு உடைந்து தங்க சுரங்கங்கள் நீருக்குள் மூழ்கிய சம்பவத்தில், 60க்கும் மேற்பட்ட சுரங்கப் பணியாளர்கள் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேவின் மஷோனாலாந்து பகுதியில், தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள அணை இரு தினங்களுக்கு முன் உடைந்தது. இதைத் தொடர்ந்து, வெள்ளப்பெருக்கெடுத்த நீர், அருகே உள்ள தங்க சுரங்கங்களில் புகுந்தது. இரண்டு தங்க சுரங்கள் இதில் முழுவதும் மூழ்கின. இதில், சட்டவிரோதமாக பணியாற்றி வந்த சுரங்கப் பணியாளர்கள் 60 முதல் 70 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம், என ஜிம்பாப்வே பொதுப்பணித்துறை அமைச்சர் ஜூலை மோயோ தெரிவித்தார். சிக்கியவர்களை உயிருடன் காப்பாற்றுவது கடினம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர் மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் தாமதமாகி உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மீட்புப் படை வீரர்கள், பம்புகள் மூலம், நீரை வெளியேற்றி வருவதாகவும், உடல்களை விரைவில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் ம்நங்கவா, இந்த சம்பவத்தை பேரிடராக அறிவித்து நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close