கட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 03:19 pm
russia-loses-control-of-only-space-telescope

ரஷ்யாவின் விண்வெளி ரேடியோ தொலைநோக்கி தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அதனை சீரமைக்கும் முயற்சியில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இது தொடர்பாக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோமோஸ், 'ரஷ்யாவால் விண்வெளிக்கு அனுப்பட்ட ரேடியோ டெலஸ்கோப் ஸ்பெக்ட் -ஆர், ரேடியோ அஸ்ட்ரோன், டெலஸ்கோப் இரு தினங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கடந்த இரு தினங்களாக டெலஸ்கோப் எந்த தகவல்களையும் அனுப்பவில்லை. நிலைமை என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால், தற்போது அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஆய்வகம் ஒன்று டெலஸ்கோப் இருப்பதற்கான சிக்னல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

அவைகளுடைய 'ஆன் போர்டு' முறையாக தன்னிச்சையாக செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த ஸ்பெக்ட்-ஆர்- டெலஸ்கோப் கடந்த 2011ல் விண்வெளியில் உள்ள கருப்பு துளைகள், நியூட்ரான், புவியின் காந்தத்தன்மை குறித்து அறிய விண்வெளிக்கு அனுப்பட்டது. ரேடியோ அஸ்ட்ரோன் என்பது மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாகும். இதனை மீண்டும் செயல்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடன் ரஷ்யா ஸ்பெக்ட்-ஆர்ஜி என்ற டெலஸ்கோப்பை அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close