பிரதமர் நரேந்திர மோடிக்கு "சியோல் அமைதி விருது"

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Feb, 2019 01:47 pm
pm-modi-recieves-seoul-peace-prize

தென் கொரிய அரசின், "சியோல் அமைதி விருது - 2018" இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று அதிகாலை தென் கொரிய தலைநகர் சியோல் போய்ச் சேர்ந்தார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து "சியோல் அமைதி விருது - 2018" பிரதமர் நரேந்திர மோடிக்கு ,தென்கொரிய அரசினால் வழங்கப்பட்டது. விருதுடன் 2 லட்சம் அமெரிக்க டாலரும் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

விருதை பெற்று கொண்ட பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவில் இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்த விருதானது அவருக்கு வழங்கப்படுவது அல்ல என்றும், 130 கோடி இந்தியர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் தெரிவித்தார்.

இந்திய மக்களின் சார்பாகவே இந்த விருதை தாம் நேரில் பெற்றுக்கொள்வதாக அப்போது அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close