தேர்தல் நேரத்தில் நைஜீரியாவில் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்!

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 09:46 pm
blasts-and-gunfire-in-nigeria-during-election

66 பேரை பலிகொண்ட கொடூர தாக்குதலுக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நைஜீரிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், மைடுகுரி நகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 

நைஜீரியாவின் கடுனா பகுதியில், கடந்த வாரம் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், கிராம மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டில் நடைபெறவிருந்த தேர்தல் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்குப்பின் இன்று அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பொது மக்கள் ஆர்வமாக இருந்தனர். வாக்குப்பதிவு துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, மைடுகுரி என்ற ஊரில், தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு காரணம் போகோ ஹராம் தீவிரவாதிகள் என்று தெரிவிக்கப்பட்டாலும், இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். மற்ற இடங்களில் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருவதாக தெரியவந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close