கிம்ஜான் உன்- டிரம்ப் சந்திப்பு நாளை நடைபெறுகிறது

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Feb, 2019 06:46 pm
summit-between-donald-trump-kim-jong-un-to-take-place-in-hanoi-tomorrow

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அணு ஆயுதக் குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா அதிபர் கிம்ஜாங் உன், ரயில் மூலம் வியட்நாம் எல்லையில் உள்ள நகரான டாங்-டோங்குக்கு புறப்பட்டார்.

60 மணி நேர ரயில் பயணத்திற்குப் பின் அங்கிருந்து அவர் கார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஹானோய் நகருக்கு செல்வார்.  கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சந்தித்த இரு தலைவர்களும் அணு ஆயுதக் குறைப்பு குறித்து பரஸ்பர ஒப்புதல் அளித்தனர். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை வியட்நாமில் நடைபெற உள்ளது.

இதுகுறிதது தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தாம் வியட்நாம் நோக்கி செல்வதாகவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close