அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியட்நாம் சென்றடைந்தார்

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Feb, 2019 08:43 am
us-president-donald-trump-arrives-in-hanoi-for-the-second-summit-with-north-korean-leader-kim-jong-un

வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.
 
இதைத்தணிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் இன்று மற்றும் நாளையும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு நேற்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close