ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 09:27 am
americans-killed-in-kenya-helicopter-crash-were-avid-travelers

கென்யாவில் சுற்றுலா பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 அமெரிக்கர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் மத்திய தீவு அருகே தர்கானா ஏரியின் நடுவில் தேசிய பூங்கா ஒன்று உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டரில் தான் சுற்றி பார்க்கின்றனர். 

இந்நிலையில் நேற்று,  இந்த பூங்கா அருகே ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்குவதற்கு சற்று முன்பு விபத்துக்குள்ளானது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேர், கென்யாவைச் சேர்ந்த பைலட் என 5 பேர் பலியாகினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கர்கள் 4 பேரும் சுற்றுலா பிரியர்கள் என்றும், தற்போது விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்ய அப்பகுதிக்கு சுற்றுலா சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close