நைஜீரியாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 09:15 am
nigeria-building-collapse-official-toll-shows-20-dead-45-survivors

நைஜீரியாவில் பள்ளிக்கூடத்துடன் இணைந்த ஒரு வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ள சம்பவம்எ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில் 4 தளங்களை கொண்ட ஒரு வணிக வளாகம் எதிர்பாராத விதமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தின் 4வது தளத்தில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவந்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீசார் மற்றும் மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் அதிவிரைவாக வந்து தீவிர மீட்டப்பணியில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவத்தில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பள்ளியின் உரிமையாளர், ஒரு கர்ப்பிணி பெண், 12 குழந்தைகள் அடங்குவர். 

மேலும், 10 குழந்தைகள் உள்பட 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இதுவரை 45 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். தொடர்ந்து இடிந்த பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close