நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூட்டில் 9 இந்தியர்கள் மாயம்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 12:20 pm
9-indians-missing-2-injured-in-new-zealand-mosque-shootings

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 இந்தியர்கள் மாயமானதாகவும், மேலும் 2 இந்தியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் நேற்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் மசூதிக்குள் புகுந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக நியூசிலாந்து காவல்துறை 4 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவன் ஆஸ்திரேலிய பயங்கரவாதி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதை அந்த பயங்கரவாதி பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளான். 

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியானவர்களில் பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளனர். இதில், 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். நியூசிலாந்திற்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி இதனை தெரிவித்துள்ளார். அந்த 9 இந்தியர்கள் யார் என்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை தகவல்களை சேகரித்து வருகிறது. மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் மசூதிக்கு வெளியே ஹோட்டல் நடத்தி வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close