மொஸாம்பிக் சூறாவளி; பலி எண்ணிக்கை 1000?

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 09:32 pm
mozambique-president-says-cyclone-death-toll-could-rise-to-1000

ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் கடந்த வாரம் தாக்கிய சூறாவளியால் 166 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அந்நாட்டின் அதிபர் பிலிப்பே நியூசி தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம், ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு நாடான மொஸாம்பிக்கில் கரையை கடந்த இடாய் புயலால், மொஸாம்பிக், ஜிம்பாபவே மற்றும் மலாவி நாடுகளில் கடும் மழை பெய்தது. இதில், மொஸாம்பிகக்கின் பெய்ரா நகர் புயலால் கடுமையாக சேதமடைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டை தாக்கிய மிக மோசமான புயல் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மொஸாம்பிக் நாட்டில் 166 பேர் பலியானதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெலிகாப்டரில் பெய்ரா நகரை பார்வையிட்ட அந்நாட்டின் அதிபர் பிலிப்பே நியூசி, பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டும் என தெரிவித்துள்ளார். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close