துப்பாக்கிச்சூடு எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்குத் தடை!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 04:36 pm
new-zealand-to-ban-military-style-semiautomatic-guns-jacinda-ardern-says

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வாரம் முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, சில மர்ம நபர்கள் மசூதிக்குள் புகுந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 7 பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக நியூசிலாந்து காவல்துறை 4 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவன் ஆஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட்டை கைது செய்து நியூசிலாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் குற்றவாளி, செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி மற்றும் ரைபிள் ரக துப்பாக்கிகளை உபயோகித்துள்ளான். இதையடுத்து,  செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

துப்பாக்கிகள் தொடர்பான இந்த புதிய விதிமுறை வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close