மெ‌ாசாம்பிக் கோரப்புயல்- 417 பேர் உயிரிழப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Mar, 2019 11:34 am
417-people-dead-in-mozambique-after-cyclone-idai


மொசம்பிக் நாட்டில் கோரத்தாண்டவமாடிய இடாய் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் மேலும் 250 மக்கள் உயிரிழந்துள்ளனர். 

மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த வாரம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் 'இடாட் புயல்' தாக்கியது. இதன் காரணமாக ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன. பக்கத்தில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியை இந்த கோரப்புயல் துவம்சம் செய்துள்ளது .

இந்த புயலின் தாக்கத்தால் மொசாம்பிக் நாட்டின் சில பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் சாலை போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
புயலை தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. 

ஏற்கனவே வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மொசாம்பிக் நாட்டில் மட்டும் இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து கொண்டு வருகின்றனர்.

பல இடங்களில் சூழ்ந்திருந்த வெள்ளம் மெல்ல வடிந்துவரும் நிலையில் இடாய் புயல் மற்றும் மழை, வெள்ளம் பாதிப்புக்கு மொசம்பிக் நாட்டில் மட்டும் 417 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. 

பக்கத்தில் இருக்கும் கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் சுமார் 250 பேர் பலியானதாகவும் ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
newtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close