இன்று உலக காசநோய் தினம்

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Mar, 2019 12:04 pm
world-tuberculosis-day-2019

காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதுடன் ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டு பிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

உலகக் காசநோய் எழுச்சியை ஒழிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ஆம் தேதி உலகக் காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1882-ஆம் ஆண்டு இதே நாளில் டாக்டர் ராபர்ட் கோச், காசநோயை உருவாக்கும் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டதை அறிவித்தார். அதன்பிறகே காசநோய் அற்ற உலகை ஏற்படுத்த உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சுகாதார அமைச்சர்கள் அடங்கிய அரசியல் அளவில் மட்டும் அல்லாமல், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், நகரத்தந்தைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமுதாயத் தலைவர்கள், காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பணியாற்றும் பிற பங்குதாரர்கள் ஆகிய அனைவரும் காச நோய் ஒழிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close