ஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாந்தில் தரை இறங்கிய விமானம்

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Mar, 2019 12:14 pm
british-airways-flight-mistakenly-lands-in-scotland-instead-of-germany

லண்டனிலிருந்து ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகருக்குச் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் தரை இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பயணிகள் தாங்கள் எங்கு இறங்கப்போகிறோம் என்று அறியாத நிலையில், எடின்பர்க் நகருக்குப் உங்களை வரவேற்கிறோம் என்று விமானி பயணிகளை வரவேற்று அறிவித்ததை தொடர்ந்தே, விமானம் , டசோல்டோர்ஃபர் நகருக்கு பதிலாக விமானம் எடின்பர்க்கில் தரையிறங்கி இருப்பது தெரிய வந்தது.

முதலில் இதை நம்ப மறுத்த பயணிகள், விமானி தமாஷ் செய்கிறார் என்றே நினைத்தனர். ஆனால், விமானத்தில் இறங்கும்போதுதான், அவர்கள் இடம்மாற்றி அழைத்து வரப்பட்டது தெரிய வந்தது. விமானிக்குத் தவறான பயணப்பாதை கொடுக்கப்பட்டதால் இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விமானி, இது எப்படி நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறியதாக பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்னர் நடந்ததே இல்லை என்றும் அவர் சொன்னார். இதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் விமானப் பணியாளர்கள் யோசித்து வருவதாக விமானி உறுதியளித்தார் நடந்தது குறித்து பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்களுக்காக மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close