ஜப்பானில் நிலநடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Mar, 2019 05:05 pm
5-4-magnitude-earthquake-strikes-off-japan-s-miyazaki-prefecture

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 3.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானது. 

இந்த நிலநடுக்கத்துக்கு முன்னதாக இன்று காலை சுமார் 9 மனியளவில் மியாசாக்கி, எஹைம், கோச்சி, குமாமொட்டோ, ஓய்ட்டா உள்ளிட்ட பகுதிகளில் 3 முதல் 4 ரிக்டர் வரையிலான நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close