வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட தடை!!

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 03:43 am
venezuela-opposition-leader-banned-from-contesting-in-elections

வெனிசுவேலா நாட்டில், அதிபர் மடுரோவுக்கு எதிராக பொதுமக்களை திரட்டி வரும் எதிர்க்கட்சித் தலைவர் குவேயிடோ, 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் தலைமை கணக்காயர் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோவுக்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வரலாறு காணாத அளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதால் அன்றாடத் தேவைகளுக்காக பொது மக்கள் திண்டாடி வருகின்றனர். வறுமை தலைவிரித்து ஆடும் நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் குவேயிடோ, அதிபர் மடுரோவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தலைவரான அவர், கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டின் இடைக்கால அதிபர் தான், என அறிவித்தார். அமெரிக்கா உட்பட 50 நாடுகள் அவரை அதிபராக அங்கீகரித்துள்ளன.

இந்த நிலையில், அவரது கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாக அந்நாட்டின் நிதித்துறை கணக்காளர் தெரிவித்துள்ளார். இதற்கு தண்டனையாக அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசு. அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், இந்த தடை அமலுக்கு வரிக் என்றும், 15 வருடங்களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கணக்காளரின் இந்த முடிவை குவேயிடோ ஏற்க மறுத்துவிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close