ஜப்பானில் கடை நடத்தி வியாபாரம் செய்யும் நாய்!

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Mar, 2019 04:41 pm
this-adorable-shiba-dog

ஜப்பானில் இருக்கும் ஹோக்கைடோ தீவில், கென்-குன் என்கின்ற நாய், சொந்தமாக கடை வைத்து சர்க்கரை வள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறது. 

ஒரு பெட்டிக்கடை போல இருக்கும் கடையின் கவுன்டருக்குப் பின்னால் கென்-குன் என்ற அந்த நாய் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பதாகையில், நான் ஒரு நாய் என்பதால், உங்களுக்கு சில்லரையைத் தர முடியாது என்று எழுதப்பட்டுள்ளது. 
 


கென்-குன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், எந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு, அதற்கான பணத்தையோ, அல்லது அதற்கு மேலோ பணப் பெட்டியில் போட்டு விடுகின்றனர். கிழங்கிற்கான காசு போக மிச்சம் இருப்பது கென்-குன் உணவிற்கு செலவிடப்படும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

கென்-குன் பற்றிய செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சமத்தாகவும் சாமர்த்தியமாகவும் வியாபாரம் பார்த்து வரும் கென்-குன்-ஐப் பலர் பாராட்டி வருகின்றனர்.

கென்-குன் நாய்க்கு, வெறும் வியாபாரம் செய்வது மட்டும் வேலை கிடையாது.  மாலை வியாபாரம் முடிவடைந்ததும் அதன் உரிமையாளருடன் சேர்ந்து கென்-குன்  என்கிற அந்த நாய் ஹொக்கைடோ தீவை  முழுவதுமாக ஓர் சுற்று வலம் வருவம் என்று அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close