அந்தமானில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்..!

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 11:31 am
9-earthquakes-hit-andaman-and-nicobar-islands-in-2-hours

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று 2 மணி நேர இடைவெளியில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 5.14 மணியளவில் முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.0 ரிக்டர் என பதிவானது.

அதன்பின்னர், தொடர்ந்து பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடைசியாக 6.54 மணி வரை நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இது ரிக்டரில் 5.2 என பதிவாகியுள்ளது.

இந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close