கொலம்பியாவில் 2 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Apr, 2019 12:40 pm
horrifying-moment-teen-assassin-aged-just-fourteen-shoots-two-men-dead

கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் 14 வயது சிறுவன் மேலும் இருவரை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெடல்லின் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறிய கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சிறுவனை கடையின் உரிமையாளர் வெளியேற்றினார். 

அப்போது அந்தச் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கடைக்காரையும், அருகில் இருந்த நபர்மீதும் தாக்குதல் நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கடந்த சில வாரங்களுக்கு முன் கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்தச் சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close