உலகிலேயே மனைவிக்கு அதிக ஜீவனாம்சம் அளித்த பிரபலம் யார் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 10:14 am
amazon-s-jeff-bezos-wife-mackenzie-reach-biggest-divorce-deal-in-history

உலகின் மிகப்பெரிய பணக்காரரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், உலகிலேயே மனைவிக்கு அதிக ஜீவனாம்சம் அளித்த கணவர் என்ற பெருமையை பெறுகிறார். 

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி, கடந்த சில வருடங்களாக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து வருகிறார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ். இவருக்கும், மெக்கன்சி என்பவருக்கும்  அவருக்கும் 1993 செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. அதன் பின்னரே 1994 ஆம் ஆண்டு பெசோஸ், அமேசான் நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பித்த ஒரு சில வருடங்களிலேயே அமேசான் நிறுவனம் லாபத்தை குவிக்க ஆரம்பித்தது. தற்போது நம்பர் ஒன் என்ற இடத்திற்கு வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக  ஜெப் பெசோஸ், மெக்கன்சி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்யஉள்ளதாக தகவல் வெளியானது. நேற்று இருவருக்கும் விவாகரத்து கையெழுத்தானது. 

அமெரிக்காவில் விவாகரத்து செய்தால் கணவர், அவரது மனைவிக்கு 50% சொத்துகளை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி பெசோஸ் 50 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 25% பங்குகளை மட்டுமே அளித்துள்ளார். இதனை அவரது மனைவி மெக்கன்சியும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜெப் பெசோஸ், ஜீவனாம்சமாக மனைவிக்கு அளித்த பங்குகளின் மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) ஆகும்.

இதன்மூலம், உலகிலேயே தனது மனைவிக்கு அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்த நபர் என்ற பெருமையை ஜெப் பெசோஸ் பெறுகிறார். அதேபோன்று, கணவரிடம் இருந்து இந்த பங்குகளை பெறுவதன் மூலம், உலகில் நான்காவது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற பெயரை மெக்கன்சி பெறுகிறார். 

தனது மனைவிக்கு இவ்வளவு சொத்துக்கள் கொடுத்தாலும்,  ஜெப் பெசோஸ், பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலேயே நிலைக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close