ஈரான் நாட்டில் மழையால் வெள்ளப்பெருக்கு – 70 பேர் உயிரிழப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Apr, 2019 06:45 pm
iran-floods-death-toll-reaches-70

ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப்பெருக்கால் 70 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தென்மேற்கில் உள்ள குசெஸ்தான் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையே வெள்ளப்பெருக்கிற்கு காரணமாகி உள்ளது.

தொடரும் மழையாலும், கரை கடந்து ஓடும் ஆறுகளாலும் 1,900 நகரங்களும், கிராமங்களும் தத்தளிப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ஆயிரம் பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனா்.

லோா்ஸ்டான் பிராந்தியத்தில் உள்ள எட்டு கிராமங்களில் வெள்ளத்தால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் அந்த கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியை ஈரான் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close