உக்ரைன்- ரிங் மாஸ்டரை தாக்கிய சிங்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Apr, 2019 01:44 pm
circus-lion-attacks-trainer-as-audience-screams

உக்ரைன் நாட்டின் லுகன்ஸ்க் என்ற நகரில் சமீபத்தில் நடந்த சர்கஸ் நிகழ்ச்சியில் ஹமடா கவுடா என்ற எகிப்து ரிங் மாஸ்டர், சிங்கத்தின் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். 

சில சாகச காட்சிகளுக்கான 2 சிங்கங்கள் கூண்டுக்குள் நுழைந்தன. ஒன்று ரிங் மாஸ்டர் ஹமடாவின் பேச்சைக்கேட்டு உட்கார்ந்த நிலையில், மற்றொரு சிங்கம் அவரை நோக்கி பாய்ந்து கையை குறிவைத்து கடிக்கத் தொடங்கியது. 

சுற்றியிருந்த பொதுமக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து கூப்பாடு போடத்தொடங்கினர். சில நிமிடங்கள் சிங்கத்தின் பிடியில் இருந்த ஹபடா, பின்னர் கால்களை கொண்டு சிங்கத்தை தாக்கினார். பின்னர், சிங்கம் அங்கிருந்து மீண்டும் தனது இருப்பிடத்துக்குச் சென்றது. 

சம்பவம் தொடர்பாக பேசிய ஹபடா, மனிதர்களைப் போல விலங்குகளும் சில நேரங்களில் மனக்குழப்பத்தில் இருக்கும். அதனால், வித்தியாசமாக நடந்து கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close