பொது தேர்தல்: போலி அக்கவுன்ட்களை களையெடுக்கும் ஃபேஸ்புக் நிறுவனம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Apr, 2019 04:30 pm
lok-sabha-polls-facebook-removing-10-lakh-accounts-a-day
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளை பயன்படுத்தி, ஃபேஸ்புக்கில் இயங்கிவரும் போலி அக்கவுன்ட்கள், தினசரி பத்து லட்சம் என்ற கணக்கில் நீக்கப்பட்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, ஃபேஸ்புக்கில் சந்தேகிக்கக்கூடிய நடவடிக்கைகள் நிறைந்த அக்கவுண்ட்கள் நீக்கம் மற்றும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.
 
பொது தேர்தலில் நேர்மையை காக்க உள்ளூர் நிறுவனங்கள், அரசு குழுக்கள் மற்றும் வல்லுநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என ஃபேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை தலைவர் அஜித் மோகன் தனது வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
 
இந்தியாவில் தேர்தல் நேர்மையாகவும், எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக பணியாற்றி வருகிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close