விதிகளை மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு 3 வாரம் சிறை

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 01:20 pm
indian-origin-man-set-off-diwali-fireworks-at-3-am-in-singapore-jailed

விதிகளை மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு 3 வார கால சிறை தண்டனை அளித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, நள்ளிரவு 3 மணியளவில் வீட்டுமுன் அவா் பட்டாசுகளை வெடித்துள்ளார்.

சுமார் 5 நிமிடம் பயங்கர சத்தத்துடன் நடந்த இந்த வானவேடிக்கை அக்கம் பக்கத்தினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி மார்வின் பே, குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடித்ததால், இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூனுக்கு, 3 வார கால சிறை தண்டனை மற்றும் இரண்டரை லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close