நேபாளத்தில் பப்ஜி கேம்மிற்கு தடை

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 02:41 pm
pubg-banned-by-nepal-citing-negative-impact-on-children

பிரபலமான ஆன்லைன் விளையாட்டான பப்ஜி நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பப்ஜி விளையாட்டின்  உள்ளடக்கம் குழந்தைகளின் மனதில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் இருப்பதாக அதிகாரியொருவர் கூறியுள்ளார். 

பப்ஜி விடீயோ விளையாட்டில் குழந்தைகள் மிகவும் அடிமைப்பட்டுள்ளனர் என்று நேபாள தொலைத் தொடர்பு அதிகாரியான சந்திப் அதிகரி தனியாா் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. 

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுகளில் பப்ஜி விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

இந்த விளையாட்டை ஆன்லைனின் 12 பேர் இணைந்து விளையாட முடியும். ஒருவரையொருவர் போராடி பிறரை வெளியேற்றுவதுதான் இந்த விளையாட்டின் அம்சமாக உள்ளது.

பப்ஜி விளையாட்டினால் எந்தவொரு துயர்மிகு சம்பவம் நடைபெறவில்லை. மாறாக பெற்றோர்கள், குழந்தைகளின் படிப்பு கெடுவதாலும்  அன்றாட வேலைகளைக் கூட பாராமல் விளையாட்டில் ஈடுபடுவதாகவும் கவலை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close