ரஷ்ய நாட்டின் உயரிய விருதை பெற உள்ள பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 04:47 pm
narendra-modi-now-conferred-with-russia-s-highest-decoration-order-of-st-andrew-the-apostle

ரஷ்யா நாட்டின் உயரிய விருதாக கருதப்படும், 'புனித செயின்ட் ஆண்ட்ரூ விருது' பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக ரஷ்ய தூதரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்ட ஆவணத்துடன், நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ரஷ்யாவில் குடிமைப்பணி, ராணுவம், சில முக்கிய கலைகளில் சிறப்பாக செயல்படும் தலைவர்கள், சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.  தற்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதன் மூலம் முதல்முறையாக, செயின்ட் ஆண்ட்ரூ விருது ஓர் இந்தியருக்கு வழங்கப்படுவது பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.

ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், தொடர்ந்து பணியாற்றி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியை கௌரவிக்கும் வகையில், புனித செயின்ட் ஆண்ட்ரூ விருது வழங்கப்படுவதாக ரஷ்ய தூதரகத்தினால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நற்செயல்களை செய்யும் மன்னர்களுக்கு மட்டுமே வழங்கப்படும், உயர்ந்த குடிமகன் என்ற விருதை ஐக்கிய அரபு அமீரகம் இந்திய பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் ஸாயீத் அல் நாகியான் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது ரஷ்யாவின் உயரிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

'செயின்ட் ஆண்ட்ரூ விருது'  - ஓர் பார்வை..

1698ம் ஆண்டு முதல் Tsar Peter the Great என்பவரால் 'செயின்ட் ஆண்ட்ரூ விருது' வழங்கும் முறை தொடங்கப்பட்டது. ஆனால், சோவியத் யூனியன் உருவான சமயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1998 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

இயேசு நாதரின் சீடனாகிய 'செயின்ட் ஆண்ட்ரூ' என்பவரின் நினைவாக வழங்கப்படும் இவ்விருதை  Fyodor Golovin என்ற ரஷ்ய பேரரசின் அதிபர் தான் முதலில் பெற்றவர். தொடர்ந்து ரஷ்ய நாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த எழுத்தாளர்கள், ராணுவத்தினர், மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

மற்ற நாட்டு தலைவர்கள் என்ற பட்டியலில், சீன அதிபர் ஸி ஜின்ங்பிங், கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நாசர் பயேவ் ஆகியோர் இதனை பெற்றுள்ளனர். தொடர்ந்து, இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் இந்த உயரிய விருதை பெறும் முதல் இந்திய தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close