பேஸ்புக் தலைமை செயல் அதிகாாி மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக 156 கோடி ரூபாய் செலவு

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Apr, 2019 04:03 pm
facebook-spent-22-6-million-on-zuckerberg-s-security

கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி, மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த ஒழுங்குமுறை அறிக்கையில் பேஸ்புக் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக 1 டாலரை அடிப்படை ஊதியமாக பெற்று வரும் ஜூக்கர்பெர்க்கின், பிற செலவினங்களுக்காக மட்டும், இந்திய மதிப்பில் 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பகுதி ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அவர் பயணம் செய்யும் தனி விமானங்களுக்காக மட்டும் சுமார் 18 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்படுவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு 62 கோடி ரூபாயாக இருந்த இந்த செலவினங்கள், 2018ம் ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close