ஆஸ்திரேலியா இரவு விடுதி அருகே துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Apr, 2019 01:39 pm
shooting-at-australia-nightclub-leaves-1-dead-1-critical

ஆஸ்திரேலியா நாட்டின் இரவு விடுதி அருகே மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் சேப்பல் தெரு மற்றும் மால்வெர்ன் சாலை அருகே இரவு விடுதி ஒன்று அமைந்துள்ளது.

இந்நிலையில், விடுதிக்கு வெளியே இன்று அதிகாலை திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவா் இறந்த நிலையில், பலர் காயமடைந்து உள்ளனர்.

வன்முறை, துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவையும் ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைவு என்பதால் வெளிநாடுகளுக்கு சென்று வாழ விரும்புபவர்களின் விருப்பத்தேர்வாக இந்நாடு விளங்குகிறது.

கடந்த 1996-ம் ஆண்டில் இங்குள்ள போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்ன் நகருக்கு உட்பட்ட பிரஹான் பகுதியில் உள்ள இரவு விடுதி வாசலில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close