ஒரே ஆண்டுதான் டைம்: டிரம்பிற்கு கெடு வைத்த கிம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 06:15 pm
north-korea-s-kim-gives-us-time-till-year-end-for-more-flexibility

அமெரிக்கா சரியான அணுகுமுறையோடு வந்தால் மட்டுமே அதிபர் டொனால்டு டிரம்புடன் மூன்றாவது பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வேன் என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு முதல் முறையாக சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். இந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் எதுவும் வெளிப்படையாக இருதரப்பினராலும் தெரிவிக்கப்படவில்லை. அதையடுத்து நிகழாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஹனோயில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பும் தோல்வியடைந்தது.
 
முக்கிய அணு ஆய்வு தளத்தை அழிப்பதற்கு பிரதிபலனாக, வடகொரியா மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் விலக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கோரியதால் இந்த சந்திப்பை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
 
ஆனால், அமெரிக்காவின் இந்த கூற்றை வடகொரியா மறுத்துவிட்டது. உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா உண்மையிலேயே விரும்புகிறதா என்பதில் கடைசி சந்திப்பு பெரும் சந்தேகத்தை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாக மிக சமீபத்திய உரையில் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.

மேலும், சரியான அணுகுமுறையோடும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளோடும் மூன்றாவது உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்துமானால், இன்னொரு முறை முயற்சிக்க தயாராக இருக்கிறோம் என்றும் கிம் கூறியுள்ளார்.

புதிய உச்ச மாநாடு பற்றிய எந்தவொரு துணிச்சலான முடிவை எடுக்கவும் இந்தாண்டு இறுதி வரை அமெரிக்காவுக்கு நேரமளிப்பதாகவும் வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close