கடலில் 209கி.மீ நீந்தி சென்ற நாய் உயிருடன் மீட்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 12:09 pm
stranded-dog-is-rescued-209km-out-to-sea

தாய்லாந்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 209 கிலோ மீட்டர் தூரம் நீந்திச் சென்ற நாய் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து வளைகுடா பகுதியில் அந்நாட்டுக்குச் சொந்தமான பெட்ரோலியக் கிணறு உள்ளது. இதில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இரும்புக் குழாய்களுக்கு நடுவே நாய் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட பெட்ரோலிய கிணறு ஊழியர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

ஏனெனில் தரைப்பகுதியில் இருந்து சுமார் 209 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் நடுக்கடலில்தான் இந்த பெட்ரோலியக் கிணறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து நாயை மீட்ட ஊழியர்கள் அதனை கரைக்கு எடுத்துச் சென்ற போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமம் ஒன்றில் இருந்து அந்த நாய் அடித்து வரப்பட்டு கடலில் நீந்தி வந்தது தெரியவந்தது.

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மீட்கப்பட்ட நாய் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஊழியா்கள் தொிவித்துள்ளனா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close