தாய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 11:47 am
strong-quake-hits-east-taiwan-rattles-buildings-in-capital

தாய்வான் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

தாய்வான் நாட்டில் உள்ள ஹீவேலியன் மாகாணத்தின் கிழக்கு கடலோர பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தொிவிக்கின்றன. 

கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டா் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இது தலைநகா் தாய்பெய் நகாிலிருந்து 115 கிலோ மீட்டா் தொலைவில் உணரப்பட்டதாகவும், அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் தொிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால், மக்கள் பீதியில் சாலைகளில் தஞ்சம் புகுந்ததாகவும், எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சாிக்கை விடுக்கப்படவில்லை என்றும் அவா்கள் தொிவித்தள்ளனா். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close