திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் உயிரிழந்த சோகம்!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 09:12 am
13-people-shot-dead-at-a-family-party-in-mexico

மெக்ஸிகோவில் நேற்று இரவு நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மர்ம நபர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். 

மெக்ஸிகோவின் தென்கிழக்கு பகுதியில் 'மினடிட்லன்' (Minatitlán) என்ற நகரில் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மர்மநபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 6 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன், அந்நகரிலேயே மதுக்கூடம் வைத்து நடத்துகிறான் என்றும், அவன் பெயர் 'El Beky' என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவன் என்ன நோக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினான் என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்த சம்பவத்திற்கு அந்நகரின் மேயர் மற்றும் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த இடம் மெக்சிகோ நகருக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close