இலங்கை குண்டுவெடிப்பு- பிரான்சின் ஈபிள் டவரில் நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 11:10 am
eiffel-tower-goes-dark-to-honor-sri-lanka-attack-victims

இலங்கையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஈபிள் டவரில் விளக்குகள் அணைக்கப்பட்டது.

கொழும்பு நகரில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள், மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் உள்பட இலங்கையில் 8 இடங்களில் நேற்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. 

ஈஸ்டர் தினமான நேற்று தேவாலயங்களை குறிவைத்து நடந்த கொடூர தாக்குதலில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 290 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் உள்பட உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் இலங்கை குண்டு வெடிப்புக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஈபிள் டவரில் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close