பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 06:40 pm
earthquake-hits-philippines-thousands-flee-area-near-manila

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகா் மணிலா அருகேயுள்ள லுஸான் தீவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகா் மணிலா அருகேயுள்ள லுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close