இந்தியாவில் மேலும் 12 புதிய அணு உலைகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Apr, 2019 12:06 pm
12-more-nuclear-power-plants-coming-up-says-dae-chief

இந்தியாவின் அதிகரித்துவரும் மின்சார தேவையை பூர்த்திசெய்ய வேண்டியும், தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்கும் வகையிலும், மேலும் 12 அணு உலைகள் அமைக்கப்படவுள்ளதாக அணுசக்தி கமிஷன் தலைவரும், அணுசக்தி துறை செயலாளருமான கே.என்.வியாஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் சோச்சியில நடைபெற்ற ரஷ்ய சர்வதேச அணு கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய நிலையில், இந்தியாவில் மொத்தம் 9 அணுஉலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை, வருகின்ற 2024 - 2025 காலகட்டங்களில் முடிக்கப்படவுள்ளன. 

இவற்றில், 700 மெகாவாட் திறன்கொண்ட 2 அணு உலைகள் குஜராத்திலும், அதேதிறன் கொண்ட 2 அணுஉலைகள் ராஜஸ்தானிலும் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அணு உலையும், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன்கொண்ட 1 அணு உலையும், ஹரியானாவின் கோரக்பூரில் 700 மெகாவாட் திறன்கொண்ட 2 அணு உலைகளும் இதில் அடக்கம்.

இவைதவிர்த்து, மேலும் 12 புதிய அணு உலைகளைக் கட்டுவித்து, மின்உற்பத்தியைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 12 அணு உலைகளில், 10 அணுஉலைகள் 700 மெகாவாட் திறனிலும், 2 அணு உலைகள் 1000 மெகாவாட் திறனிலும் அமையவுள்ளதாக அந்தக் கண்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.என்.வியாஸ் தொிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close