நேபாளத்தில் நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 07:51 am
an-earthquake-with-a-magnitude-of-4-8-on-the-richter-scale-hit-kathmandu-nepal

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 6:14 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 -ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து 6:29 மணிக்கும், 6:40  மணிக்கும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தாடிங் மாவட்டத்துக்குட்பட்ட நவ்பைஸ் எனும் இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 5.2, 4.3 -ஆக பதிவாகியது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close