சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Apr, 2019 11:48 am
saudi-arabia-beheads-37-for-terrorism-crimes

சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் 37 பேரின் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசு, உள்நாட்டு தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பயங்கரவாத கொள்கையை பரப்புவோர், பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோர், அத்தகைய தாக்குதலுக்கு உதவி புரிந்தோர் என 37 பேரை கைது செய்து, அண்மையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இவர்கள் சவுதியில் உள்ள ரியாத், மெக்கா, மதினா மற்றும் ஆசிர் பகுதியை சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவருக்கும் அவரவர் இடங்களில் தண்டனை அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி 37 பேரும் ஒரே நேரத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இவர்களில் இருவருடைய தலை இல்லாத உடல்கள் மட்டும், ரியாத் நகரில் மக்கள் பார்வைக்காக ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close